பலாப்பழங்களை ருசிக்க முகாமிட்டுள்ள யானைகள்: அச்சத்தில் பொது மக்கள்! - undefined
நீலகிரி மாவட்டம், பர்லியார் அடர்ந்த வனங்கள் சூழ்ந்தப் பகுதியாகும். இங்கு ஐந்திற்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு மங்குஸ்தான், துரியன், ரம்புட்டான், பலா ஆகியவை அதிகளவில் விளைகின்றன. தற்போது பர்லியார் பகுதியில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில், இங்குள்ள பலாப்பழங்களை ருசிக்க காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.