'அடேய் நான் தண்ணீர் குடிக்கத்தான் வந்திருக்கேன்' - யானைக்கன்றால் மிரண்டோடிய மான் கூட்டம்!
ஈரோடு: கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் தாளவாடி புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளுக்கு குட்டைகளில் நீர் நிரப்பும் பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, குட்டைக்கு நீர் குடிக்கவந்த யானைக்கன்றைப் பார்த்து பயந்த மான் கூட்டம் தாவிக்குதித்து ஓடியது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.