சாலையில் திரியும் காட்டு யானை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை! - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகேவுள்ள ஆழியார் வால்பாறை சாலைப் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை தண்ணீர் அருந்துவதற்காக ஆழியார் அணைக்குச் சென்றுள்ளது. இதனால், பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் யானை வராமல் இருக்க வனத் துறையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆகியோர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.