யானை பொங்கல் கொண்டாட்டம் - coimbatore district news
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கோழிக்கமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் யானை பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் 21 யானைகள் கலந்துகொண்டன. குறிப்பாக சின்னதம்பி, அரிசிராஜா ஆகிய யானைகள் இடம்பெற்றன. அப்போது வன அலுவலர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.