தேங்காய் மட்டைகளுக்குள் மறைந்திருந்த 5 அடி மலைப்பாம்பு பிடிபட்டது! - மலைப்பாம்பு
கோயம்பத்தூர் : பொள்ளாச்சி அம்பராம்பாளையம் தோட்டத்தில் தேங்காய் மட்டைகளுக்கு அடியில் 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு ஆளியார் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர். இதேபோல், ஆனைமலை அருகே நள்ளிரவில் ராஜேஸ்வரன் என்பவரது குடிசை வீட்டில் புகுந்து ரேஷன் அரிசி ,பீரோ கட்டில் ஆகியவற்றை 3ஆண் காட்டுயானைகள் துவம்சம் செய்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மூன்று காட்டுயானைகளையும் அடர்வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.