மணற்சிற்பம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய மக்கள் - tn assembly election
சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பல விதமான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரைப் பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு மணற்சிற்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை அம்மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டுத் தொடங்கிவைத்தார்.