சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா! - கங்கைகொண்ட சோழபுரம் ,கும்பகோணம் ஐராவதேசுவரர் கோயில், தஞ்சை பெரிய கோவில்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வரலாற்றுச் சின்னங்களையும் , நாட்டின் புகழையும் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறது. அதன்படி அரியலூர், செந்துறை , உடையார் பாளையம் ஆகிய 3 கல்வி மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 50 மாணவர்கள் வீதம் 150 மாணவர்களை கங்கைகொண்ட சோழபுரம் ,கும்பகோணம் ஐராவதேசுவரர் கோயில், தஞ்சை பெரிய கோயில் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான சுற்றுலாவை அரியலூர் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.