வேட்டியை மடிச்சுக்கட்டி நாற்றுநட்ட முதலமைச்சர் பழனிசாமி! - விவசாயிகள் ஆரவாரம் - முதலமைச்சர் பழனிசாமி தற்போதைய செய்தி
நாகை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகை மாவட்டத்தில் இன்று பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார். நாகை மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்களுக்கு இன்று காலை விசிட் அடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு விவாசய நிலத்தில் இறங்கினார். பின், பழனிசாமி நாற்றுநட அங்கிருந்த விவசாயிகள் பெரும் ஆரவாரம் செய்து அவரை உற்சாகப்படுத்தினர். மேலும், அங்குள்ள விவசாயிகளுடன் முதலமைச்சர் அளவளாவினார்.