சசிகலா குறித்த கேள்விக்கு செய்தியாளர்களை சந்திக்க மறுத்த எடப்பாடி பழனிச்சாமி - Edappadi k Palaniswami
கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி, அவரது உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார். அவருக்கு அதிமுக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் மலர்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, பதிலளிக்காமல் அவர் புறப்பட்டுச் சென்றார்.