காவல் துறை சரகத்தில் இருந்து வெளியே செல்ல தடை - கடுமையாகும் கட்டுப்பாடுகள் - சென்னையில் இ பதிவு கட்டாயம்
சென்னை காவல்துறையினர் இன்று முதல் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு காவல் நிலைய சரகங்களில், உரிய சாலை தடுப்புகள் அமைத்து செக்டார்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் சரகத்திலிருந்து மறு காவல் நிலைய எல்லைக்குள் செல்ல அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.