நீட் தேர்வை ரத்து செய்யகோரி போராட்டம்; இளைஞர்கள் கைது! - students protest
தேனி: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகிய மாணவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் இருந்து கலைந்த செல்ல மறுத்ததால் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.