குடியுரிமை திருத்த சட்ட நகலை எரிக்க முயற்சி - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது - குடியுரிமை சட்ட திருத்த நகலை எரிக்க முயற்சி
திருப்பூர்: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருப்பூர் குமரன் சிலை அருகே சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகலை எரிக்க முயன்றபோது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து சட்ட நகலை எரிக்க முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.