தண்ணீரில் மிதக்கும் சென்னை - தண்ணீரில் மிதக்கும் சென்னை
சென்னையில் நேற்று (நவ. 6) இரவு முதல் கொட்டித் தீர்த்த கன மழையால் சாலைகள், குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சாலையில் நீர் முழங்கால் அளவிற்குத் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதியில் உள்ளனர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று (நவ. 7) செம்பரபாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.