பக்ரீத் பண்டிகை: கரோனா கட்டுப்பாடுகளால் வேலூர் ஆட்டுச் சந்தை குறைவான விலைக்கே விற்பனை! - பொய்கை மாட்டுச் சந்தை
வேலூர்: இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நாளைக் கொண்டாடப்படுகிறாது. இதனை முன்னிட்டு வேலூர் மக்கான் பகுதியில் உள்ள சந்தை திடலில் இன்று ஆட்டுச் சந்தை கூடியது. இங்கு, வேலூர், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமியர்கள் அதிக அளவில் ஆடுகளை வாங்கிச் சென்றனர். அதேபோல, பொய்கை மாட்டுச் சந்தையிலும், குர்பானி கொடுப்பதற்காக மாடுகள் வாங்கிச் செல்லப்பட்டன. கரோனா கட்டுப்பாடுகளால் குறைவான விலைக்கு ஆடு மாடுகள் விற்பனையானதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.