காவல் நிலையம் அருகே குடிமகன்கள் சண்டையிட்டு கொள்ளும் காட்சி - கொடைக்கானல் காவல் நிலையம்
திண்டுக்கல் மாவட்டம் கேசிஎஸ் திடல் அருகே காவல் நிலையம் மற்றும் அனைத்து அரசு அலுவலங்களும் அமைந்துள்ளன. இன்று (ஜூலை 16) மாலை அப்பகுதியில் மது அருந்திய சில நபர்கள் நடு சாலையில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். எனவே இது போன்று பொது இடங்களில் மது போதையில் சண்டையிட்டு பிரச்னையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.