1000 வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்! - தமிழ்நாடு மழை
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருநின்றவூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி,பெரியார் நகர், சுதேசி நகர், முத்தமிழ் நகர் ,கன்னிகாபுரம் பகுதியில் வீடுகளை சுற்றி இடுப்பளவிற்கு மழை நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக 1000 வீடுகளுக்கு மேல் மழைநீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்தது. இதனால் பொது மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இவர்கள் அவசர தேவைக்கு படகு மூலம் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.