மழைக்காலத்தில் தெருவோரக் கடைகளில் விற்கும் பொருள்களை உண்ணக்கூடாது - மருத்துவர் தேரனிராஜன் - பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய மருத்துவர் தேரனிராஜன்
சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வரும் மருத்துவருமான தேரனிராஜன் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், 'மழைக்காலங்களில் தெருவோரக் கடைகளில் விற்கும் பொருள்களை வாங்கி உண்ணக் கூடாது. காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். மழை முடிந்த பின்னரும் நீரால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். உடல் உபாதைகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அனுகவேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.
Last Updated : Nov 10, 2021, 7:59 PM IST