மக்களை தேடி மருத்துவம்- மு.க. ஸ்டாலினுக்கு பொன்முடி பாராட்டு - etv bharat
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்தார். அப்போது அவர், "இந்தியாவிலேயே முதன்முறையாக மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்த ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்" என்று பாராட்டினார்.