வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சுமந்துசென்ற கழுதைகள் - சாலைவசதியற்ற கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நேற்று சாலை வசதியற்ற கிராமங்களுக்கு குதிரைகள், கழுதைகள் மூலமும், தலையில் சுமந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் எடுத்துச்செல்லப்பட்டன.