கழுதைக்கும், கழுதைக்கும் கல்யாணம்! - கழுதை கல்யாணம்
திருப்பூர்: பல்லடம் அருகே சாமிக்கவுண்டன்பாளையம் பகுதியில் மழை வரவேண்டி பொதுமக்கள் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்து பாரம்பரிய கிராம வழிபாடு மேற்கொண்டனர். மனிதர்களுக்கு செய்யும் திருமணம் போன்று மந்திரங்கள் ஓதி பெண், மாப்பிள்ளை அழைப்பு போன்ற சம்பிரதாயங்கள் செய்து திருமணம் நடைபெற்றது. கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பாக இதுபோன்று கிராமத்தில் நடைபெற்றதாகவும் , தற்போது மழையின்மை காரணமாக விவசாயம் கால்நடைகள் செழிக்க வேண்டி ஊர்கூடி இது போன்ற பாரம்பரிய திருவிழாவை மேற்கொண்டதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்.