பாம்பிடம் இருந்து முதலாளியைக் காப்பாற்றிய பாசக்கார வளர்ப்பு நாய்கள் - முதலாளியை காப்பற்றிய நாய்கள்
கோவை: ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தனது தோட்டத்தில் மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்றபோது அங்கு சுமார் 7 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று இருந்துள்ளது. அதைக் கண்டு அவர் அச்சமடைந்தார். அப்போது அவருடன் வந்த அவரது மூன்று வளர்ப்பு நாய்களும் அந்த பாம்புடன் சண்டையிட்டு அதைக் கடித்து குதறி கொன்று விட்டது. இதனை ராமலிங்கம் தனது கைப்பேசியில் படம் பிடித்தார். விஷமுள்ள பாம்புடன் சண்டை போட்டு உரிமையாளரைக் காப்பாற்றிய நாய்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.