பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் ரயில் நிலையம் முன்பு திமுக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் குதிரை வண்டியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அவருடன் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.