மயிலாடுதுறையில் 'ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு' பரப்புரை பேரணி - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம் கோமல் ஊராட்சியில் திமுக சார்பில் 'ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு' என்ற பரப்புரை பேரணி நடைபெற்றது. இதற்கு குத்தாலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மங்கை சங்கர் தலைமை தாங்கினார். அப்போது அவருடன் மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நான்கு சக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்துச் சென்றனர்.