ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த துர்கா ஸ்டாலின்! - ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்
ராமநாதபுரம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தார். கொளத்தூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று ஸ்டாலினுக்காக பரப்புரை செய்து வந்த நிலையில், துர்கா நேற்றிரவு (மார்ச் 28) ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றடைந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்து சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்து தந்தனர்.
Last Updated : Mar 28, 2021, 11:59 AM IST