களமிறக்கப்பட்ட சசிகலாவின் காளை - அடக்குபவருக்கு திமுக அமைச்சர் அறிவித்த திடீர் பரிசு; இறுதியில் வென்றது யார்? - தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (ஜனவரி 17) விறுவிறுப்பாக நடைபெற்றது. இங்கு பல காளைகள் வாடிவாசலில் துள்ளிக் குதித்து வந்தன. இதில் சசிகலாவின் காளை வாடிவாசலில் வெளிவர காத்திருந்தது, அப்போது தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அந்தக் காளையை அடக்குபவர்களுக்கு மோதிரம் பரிசளிக்கப்படும் என அறிவித்தார். ஆனால், சசிகலாவின் காளை யாரிடமும் பிடிபடாமல் சென்றது.