செங்கல்பட்டு நகராட்சி முழுவதும் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு! - tn election 2021
செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், தற்போதைய செங்கல்பட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு நகாராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் அமைந்துள்ள கரிமேடு, தேசிக நகர், நத்தம், கலைஞர் கருணாநிதி நகர் உள்ளிட்ட பகுதிகள் தொண்டர்களுடன் நேற்று (மார்ச் 26) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.