மாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டி: வீரர்கள் ஆர்வம்! - நாமக்கல் மாவட்ட செய்திகள்
சென்னையில் வருகிற பிப்ரவரி 21 முதல் 27ஆம் தேதிவரை மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு வில்வித்தைச் சங்கத்தின் 13ஆவது மாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 10, 14, 17, 19 வயதுக்குள்பட்டோர் பிரிவு, சீனியர் வீரர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக இப்போட்டியினை மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்த நாராயணன் தொடங்கிவைத்தார்.