கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை - நாமக்கல் மாவட்ட செய்திகள்
நாமக்கல்: புகழ்பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகின்றது. இங்கு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக கொல்லிமலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உத்தரவிட்டுள்ளார்.