மழைக்காலத்தில் 33 வகையான நோய்கள் வரக்கூடும் - முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு வீடியோ! - பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம்
சென்னை: மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் வராமல் பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான அறிவுரைகளை பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வழங்கி உள்ளார். பொது சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மழைக்கால நோய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விபத்து மற்றும் விஷக்கடிக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளது. கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழைக்காலத்தில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிபடுத்திவருகிறோம். குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தபின் பயன்படுத்த வேண்டும். கிணற்றில் தண்ணீர் இருந்தால் பிளிசிங் பவுடர் கலந்த பின் பயன்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் 33 வகையான நோய்கள் வரக்கூடும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
TAGGED:
வீடியோ