மனிதச் சங்கிலி அமைத்து ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் பொதுமக்கள்! - செவகாடு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே இடையபட்டி செவகாடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் பள்ளி, பால், சிலிண்டர், மளிகை பொருட்கள், மருத்துவம், உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு நத்தம் பகுதிக்கு தான் வரவேண்டும். இடையப்பட்டியில் இருந்து செவகாடு பகுதிக்கு இடையில் காசம்பட்டி ஆறு ஒன்று குறுக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக கடந்த ஒரு மாதமாக ஆற்றுப் பகுதியில் அதிகளவு தண்ணீர் செல்வதால் தங்களால் அத்தியாவசிய வேலைகளுக்குச் செல்ல முடியவில்லை என்று புலம்பும் பொதுமக்கள், உடனடியாக ஆற்றுப் பாலம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.