சேலத்தில் தயாநிதி மாறன் கார் மீது கல்வீச்சு! - திமுக எம்பி தயாநிதி மாறன்
ஓமலூர் அடுத்த காடையாம்பட்டியில், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி பரப்புரையை முடித்துவிட்டு சேலம் திரும்பிய தயாநிதி மாறனின் வாகனத்தின் மீது பாமகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பரப்புரையில் பேசிய தயாநிதி மாறன், ராமதாசுக்கும், அன்புமணிக்கும் பணம் கொடுக்கும் அளவுக்கு திமுகவிடம் பணம் இல்லை. தேர்தல் நேரத்தில் ராமதாஸ் இடஒதுக்கீட்டை கையில் எடுத்திருப்பதாக சாடி பேசியது குறிப்பிடத்தக்கது.