ஒகேனக்கல் நீர்வரத்து 42 ஆயிரம் கன அடியாக உயர்வு! - falls water level rises
கர்நாடக மாநிலத்தின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு 44 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விட்டுள்ளது. இதனால், இன்று (ஆக.20) காலை ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 42 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. தண்ணீர் வரத்து உயர்வால், ஒகேனக்கல் மெயின் அருவி ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காலை நிலவரப்படி கபினி அணையிலிருந்து இரண்டாயிரத்து 646 கன அடியும், கிருஷ்ணராஜசாகா் அணையிலிருந்து ஐந்தாயிரத்து 260 கனஅடியும் தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது.