#dharmapuri54 - ஒகேனக்கல் உபரிநீரை வழங்க தருமபுரி விவசாயிகள் கோரிக்கை! - தருமபுரி விவசாயிகளுக்கு நீர்
தருமபுரி: தன்னகத்தே பல சிறப்பம்சங்களைக் கொண்ட தருமபுரி மாவட்டம் இன்று 54ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உயிர் நதியான காவிரி தமிழ்நாட்டில் முதலில் நுழைந்து பாயத்தொடங்கும் மாவட்டம் தருமபுரி. எனினும் இன்றளவும் வறட்சியின் பிடியில் சிக்கியிருப்பதால், ஒகேனக்கல்லிலிருந்து வெளியேறும் உபரி நீரை தங்கள் மாவட்டத்திற்கு நீரேற்று மூலம் கொண்டுவந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வறட்சியைப் போக்கி உதவ வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர்.