'போகியில் பொருள்களை எரிப்பதற்குப் பதில் மரக்கன்றுகளை நடுவோம்' - போகிப் பண்டிகை குறித்து சைலேந்திர பாபு காணொலி
போகிப் பண்டிகை இன்று (ஜனவரி 13) கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில் போகிப் பண்டிகையின்போது டயர், நெகிழி போன்ற நச்சுத்தன்மைவாய்ந்த பொருள்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், அவ்வாறு எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சினை, நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் போகிப் பண்டிகையின்போது நெகிழிப் பொருள்களை எரிப்பதற்குப் பதிலாக மரக்கன்றுகளை நடுவோம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.