முழு ஊரடங்கு எதிரொலி: முட்டைகோஸ் பயிர்களை டிராக்டர் கொண்டு அழிக்கும் அவலம்! - erode latest news
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. தற்போது தாளவாடி மலைப்பகுதியில் நெய்தாளபுரம், சிக்கஹள்ளி, தலமலை, திகினாரை, பனகள்ளி, தமிழ் புரம், மல்லன்குழி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஐந்து ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கால் நன்கு விளைந்த முட்டைகோஸ் பயிர்களை டிராக்டர் பயன்படுத்தி அழிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.