விமான நிலைய சாலை தேநீர்க்கடையில் தேநீர் அருந்திய துணை முதலமைச்சர்! - மதுரை விமான நிலைய சாலை
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது குருபூஜைக்காக மதுரையிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட முத்துராமலிங்கத் தேவருக்கான தங்கக்கவசம் மீண்டும் மதுரை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், மதுரையில் உள்ள தனியார் வங்கியில் தங்கக்கவசத்தை ஒப்படைக்க மதுரை விமான நிலையத்திற்கு வருகைதந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விமான நிலையம் வெளியே பெருங்குடி அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தேநீர்க்கடையில் தேநீர் அருந்தி சென்றார்.