சமையல் எரிவாயு விலை ஏற்றம்: ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் - சேலம் மாவட்ட செய்திகள்
சேலம்: மத்திய அரசு கடந்த ஒரு மாதத்தில் 100 ரூபாய் அளவிற்கு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தி உள்ளது. இதனை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விறகு அடுப்பின் மூலம் சமையல் செய்து சமையல் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.