தாய் பாசத்திற்கு காலமும் தூரமும் தடை இல்லை! மகனின் உணர்ச்சி பயணம்!
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வறுமையின் காரணமாக தஞ்சை மண்ணிலிருந்து சென்னைக்கு தஞ்சமடைந்தனர் கலியமூர்த்தி- தனலட்சுமி தம்பதி. இவர்களுக்கு சாந்தகுமார், ராஜன் என்று இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பல்லாவரத்தில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் டென்மார்க் நாட்டில் வசிக்கும் தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டனர். எங்கு வாழந்தாலும் மகன்கள் நன்றாக இருக்கட்டும் என்ற திருப்தியோடு வாழ்ந்த தனலட்சுமிக்கு அவரது மகன்களில் ஒருவர் கொடுத்த சர்ப்ரைஸ் அளப்பரியது.