வன உயிரின வார விழா: சைக்கிளில் விழிப்புணர்வுப் பேரணி - விழிப்புணர்வு
ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா சார்பில், வன உயிரின வார விழாவைக் கொண்டாடும்விதமாக மிதிவண்டி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதனை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் காமாட்சி கணேசன் தொடங்கிவைத்தார். இதில் ராமநாதபுரம் வனச்சரகர் வெங்கடேசன் உள்ளிட்ட வனத் துறையினர், பள்ளி மாணவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கி, ராமநாதபுரம் வன உயிரின பாதுகாப்பு அலுவலகத்தில் நிறைவடைந்தது.