'மக்களுக்குப் பணியாற்றுவதில் முன்மாதிரியாகத் திகழும் ஸ்டாலின்' - இறையன்பு
குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான பாராட்டு விழா இன்று (அக். 1) முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய தலைமைச் செயலர் இறையன்பு, “அரசுப் பணி என்பது மகத்தான பணி, அந்தப் பணியில் இருக்கக்கூடிய நீங்கள் ஏழை, எளிய மக்களின் குறைகளைக் கேட்டு, அதற்குத் தீர்வளிக்க வேண்டும். வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்” என்றார்.