கொடைக்கானலில் குளு, குளு சீசனை ரசிக்க குவியும் சுற்றுலாப் பயணிகள்!
திண்டுக்கல்: கொடைக்கானலில் வார விடுமுறையை கொண்டாட தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். குறிப்பாக, மோயர் பாயிண்ட், பைன்மர காடுகள், குணாகுகை, தூண்பாறை, வெள்ளி நீர் விழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் மக்களின் கூட்டம் ஆர்ப்பரித்துள்ளது. கொடைக்கானலின் குளு குளு சீசனை மக்கள் ஆர்வமாக ரசித்து வருகின்றனர்.