மாஞ்சா நூலில் சிக்கிய காகம் மீட்பு - காக்கை
சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் இரண்டு மரங்களுக்கு இடையே பறந்துகொண்டிருந்த காக்கை ஒன்று, அங்குள்ள மாஞ்சா நூலில் சிக்கி நீண்ட நேரமாக தவித்துக்கொண்டு இருந்தது. இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், மாஞ்சா நூலில் இருந்து காக்கையை பத்திரமாக விடுவித்தனர்.