மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நூதனப் போராட்டம்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
பாதாள சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடைக் கட்டி சவ ஊர்வலம் நடத்தி, ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.