பட்டப்பகலில் கம்யூனிஸ்ட் கொடிக்கம்பம் திருட்டு: வைரலாகும் சிசிடிவி காட்சி - CCTV footage
திருச்சி வீரமலைப்பட்டியில் நேற்று முன்தினம் (செப்.5) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதிய கொடிக்கம்பம் ஊன்றி கிளைக் கூட்டம் நடத்தினர். அன்று மாலையே கொடிக்கம்பம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கட்சியினர் வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கொடிக்கம்பம் வைத்த இடத்தின் எதிரிலுள்ள கடையின் சிசிடிவி கேமராவில் நான்கு பேர் கொண்ட கும்பல் கொடிக்கம்பத்தைப் பிடுங்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொடிக்கம்பத்தைத் திருடிச் சென்றவர்களைத் தேடிவருகின்றனர்.