மின் கம்பி அறுந்து விழுந்து பசு உயிரிழப்பு: தாயை எழுப்பிய கன்றுக்குட்டி - நெகிழ்ச்சி வீடியோ - cow death by electric shock in chennai
சென்னை பொழிச்சலூர் அடுத்த கற்பக விநாயகர் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரது பசு மாடு ஒன்று தனது கன்றுகுட்டியுடன் மேய்ச்சலுக்காக சென்றபோது கவுல்பஜார் அருகே உள்ள உயர் மின் அழுத்த கம்பி அறுந்து பசு மாட்டின் மீது விழுந்தது. இதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. நல்வாய்ப்பாக பிழைத்த கன்றுக்குட்டி தாய் பசு இறந்ததை அறியாமல் எழுப்ப முயன்றது. இந்தக் காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
Last Updated : Jan 12, 2021, 7:15 AM IST