2 மாதங்களாக சம்பளம் வழங்காததால் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - தூய்மை பணியாளர்கள் போராட்டம்
நீலகிரி: உதகை நகராட்சிக்குள்பட்ட 36 வார்டுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களில் 120-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இது குறித்த ஆணையர், துறை அலுவலர்களிடம் கேட்டபோது சரியான பதில் தருவதில்லை எனவும்; தங்களுக்கு இரண்டு மாத ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நேற்று (ஜூன் 29) மாலை திடீரென அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.