மயிலாடுதுறையில் கரோனா ஓவியம்: தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர் விழிப்புணர்வு - Corona Painting at Mayiladuthurai
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கிட்டப்பா அங்காடி சாலையில் கரோனா ஓவியம் வரைந்து தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனை மயிலாடுதுறை வட்டாட்சியர் முருகானந்தம் தொடங்கிவைத்தார். அந்த ஓவியத்தில், ‘தனித்திருப்போம்! விழித்திருப்போம்! வீட்டிலேயே இருப்போம்!’ உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.