கரோனா ஊரடங்கு: எளிமையாக நடந்த வளைகாப்பு! - விருதுநகர் செய்திகள்
கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்கும் வண்ணம் திருமணம் போன்ற நிகழ்ச்சியில் குறைந்த அளவு மக்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த தாரணி என்ற 7 மாத கர்ப்பிணிக்கு அவரது கணவர், தாய், தந்தை உள்பட சில உறவினர்களுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.