'ஓய்வின்றிப் போராடும் கள வீரர்களுக்குத் தேவை ஒன்றே' - மக்களிடம் கேட்கும் மு.க. ஸ்டாலின் - cm mk stalin
தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. உத்தரவை மீறி வெளியே வருவோருக்குக் காவல் துறையினர் அபராதம் விதித்துவருகின்றனர். இந்நிலையில், "ஓய்வின்றிப் போராடும் கள வீரர்களுக்குத் தேவை ஒன்றே, அது உங்களின் ஒத்துழைப்புதான்” என காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அன்பான வேண்டுகோள்விடுத்துள்ளார். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.