நீலகிரியில் கரோனா விழிப்புணர்வு ஓவியம்: அசத்திய ஓவியர்கள் - கரோனா விழிப்புணர்வு
உலகை உலுக்கும் கரோனா வைரஸினால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி சார்பில் மாவட்ட ஓவியர்கள் உதகை சேரிங்ராஸ், கேத்தி, எல்லநள்ளி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் கரோனா வைரஸ் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அதில் தனித்திரு, விழித்திரு, வீட்டிலேயே இரு என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.